பொது செய்தி

தமிழ்நாடு

வனத்தில் கடும் வறட்சி ; வனத்தீ ஏற்படும் அபாயம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவக்க வலியுறுத்தல்

Added : பிப் 09, 2020
Advertisement
 வனத்தில் கடும் வறட்சி ; வனத்தீ ஏற்படும் அபாயம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவக்க வலியுறுத்தல்

உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், கடும் வறட்சி நிலை காணப்படுவதால், தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில், யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழை குறைந்து, பல மாதமாக மழைப்பொழிவு இல்லை. இதனால், வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது. வன விலங்குகள், தண்ணீர், உணவு தேடி, அமராவதி அணை, திருமூர்த்தி அணைப்பகுதிகளை நோக்கி வருகின்றன.

அதோடு, எல்லையோர கிராமங்களுக்குள் புகுந்து, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது.இந்நிலையில், வறட்சியால், வனப்பகுதியில் பசுமை குறைந்து, மரங்கள், செடி, கொடிகள், புற்கள் காய்ந்து காணப்படுகின்றன. இதனால், எளிதில் வனத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது.

அதோடு, உடுமலை-மூணாறு ரோட்டில் ஏராளமான வாகனங்கள், சுற்றுலா பயணிகள் செல்லும் நிலையில், ரோட்டோரத்திலுள்ள புற்கள், மரங்களில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. வனத் துறை சார்பில், வழக்கமாக கோடை காலத்தில், உடுமலை வனச்சரகத்தில், ஆறு மீட்டர் அகலத்தில், 140 கி.மீ., அமராவதி வனச்சரகத்தில், ஆறு மீட்டர் அகலத்தில், 200 கி.மீ., துாரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும்.

350க்கும் மேற்பட்ட வேட்டைத்தடுப்பு காவலர்கள் நியமித்து கண்காணிப்புப்பணி, சின்னாறு பகுதியில், 24 மணி நேரமும் செயல்படும், தீத் தடுப்பு கட்டுப்பாட்டு என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.ஆனால், இந்தாண்டு, மழை குறைந்து, வனப் பகுதிகளில் வறட்சி நிலை காணப்படும் நிலையில், தீத்தடுப்பு கோடுகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை.எனவே, வனம் மற்றும் வன உயிரினங்களை காக்கும் வகையில், வனத்தீ முன்னேற்பாடுகளை துவக்க வேண்டும், என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், 'வனத்தில் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், தீத்தடுப்பு கோடுகள் அமைத்தல், கண்காணிப்பு பணிக்கு வேட்டைத்தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.நிதி கிடைத்ததும், பணிகள் துவங்கும். தற்போது, இருக்கும் வேட்டைத்தடுப்பு காவலர்களைக் கொண்டு, தீத்தடுப்பு கோடுகள், கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X