பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளித்து வரும் அரசு பள்ளி: கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுத்தி அசத்தல்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020
Advertisement
 குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளித்து வரும் அரசு பள்ளி: கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்படுத்தி அசத்தல்

உடுமலை:மாற்றம் நிறைந்த சூழல், மனதில் நிறையும் உற்சாகம், பதக்கங்களுடன் இனி பாடங்கள் என புதிய முயற்சியுடன், குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளித்து பள்ளியின் கற்றல், கற்பித்தல் மட்டுமின்றி, கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற் படுத்தியுள்ளது பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

மாணவர்களுக்கு பிடித்த பள்ளியாக, சூழலை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் பல பள்ளிகளில் இருந்தாலும், சில பள்ளிகளில் மட்டுமே சாத்தியமாகிறது. இத்தகைய பள்ளிகளில் பாலப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் ஒன்று.

உடுமலை பழநி ரோட்டில் உள்ள இப்பள்ளியில், 50க்கும் அதிகமான குழந்தைகள் படிக்கின்றனர். விடுப்பு எடுக்கும் மாணவர்களை,ஆசிரியர்கள் வீட்டிற்கே தேடிச்சென்று அழைத்து வருகின்றனர். பாடப்புத்தகங்கள் மட்டுமே படிப்பில்லை என, பல திறன்களையும் கை வசம் வைத்திருக்கும் குழந்தைகளுக்கு, அவற்றை வெளிப்படுத்தவும் அடையாளம் காட்டியும், ஆசிரியர்கள் ஊக்குவிக்கின்றனர்.

பழக்க வழக்கம் முதல், அமைதி காப்பது வரை, ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் நல்ல திறன்களுக்கு நாள்தோறும், இறைவணக்கக்கூட்டத்தில் ஒரு பதக்கம் என, அனைவரையும் வெற்றியாளர்களாக மாற்றுகின்றனர்.கட்டாயமில்லாமல் கல்வியை விரும்புவதற்கும், இப்பள்ளியில் ஒரு புதுவிதமான முயற்சி தான் பின்பற்றப்படுகிறது.

குறிப்பிட்ட வினாக்கள் மாணவர்களுக்கு தேர்வாக வழங்கப்பட்டு, சரியாகவும், விரைவாகவும் விடை எழுதும் குழந்தைகளுக்கு, கேரம், செஸ் என விளையாட்டுக்கு கூடுதல் நேரம் வழங்கப் படும் என்ற ஆசிரியரின் வாக்குறுதி கேட்ட பின்னர், தேர்வுகளையும் வரவேற்கின்றனர் இக் குழந்தைகள்.பள்ளியைச்சுற்றிலும் பூத்துக்குலுங்கும் வண்ண மயமான செடிகள் அனைத்தும் மாணவர்களின் பராமரிப்பில், பசுமை பள்ளியாக சூழலை மாற்றியுள்ளது.

கல்வியைப்போல, கட்டமைப்பில், பள்ளியின் மாற்றத்துக்கும் முன்னேற்றத்துக்கும் வழி வகுத்துள்ளனர் சிகரம் தொடு அறக்கட்டளையினர்.மாற்றத்தை எதிர்பார்த்து வாய்ப்பு கிடைக்காத பள்ளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக 'வாட்ஸ் ஆப் குரூப்' துவங்கியவர்கள், தற்போது, 'சிகரம் தொடு' அறக்கட்டளையாக அமைத்து அரசுப்பள்ளிகளை மேம்படுத்தி உள்ளனர்.

உடுமலை கல்வி மாவட்டத்தில் மட்டுமே, ஐந்து அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் வகுப்புகளை' இந்த அறக்கட்டளை அமைத்துள்ளது. தற்போது, இந்த அறக்கட்டளையின் மூலம், இப் பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பு, வண்ணமயமான வகுப்பறைகள், கம்ப்யூட்டர் வசதி, செயற்கைபுல் தரையுடன் நடைபாதை, குழந்தைகளுக்கு வண்ண நாற்காலிகள், பள்ளியை சுற்றிலும் மரக்கன்றுகள், கண்காணிப்பு கேமரா என, 6 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளியின் சூழலை முழுவதுமாக மாற்றியுள்ளனர்.

தலைமையாசிரியர் வள்ளிமயில் கூறுகையில், '' மாணவர்கள், படிப்பதற்கு, முதலில், பள்ளி அவர்களுக்கு பிடித்த வகையில் இருக்க வேண்டும். இதற்கான முயற்சிக்கு முற்றிலுமாக சிகரம் தொடு அறக்கட்டளைதான் உதவியுள்ளது. குழந்தைகளும் இதனால், பள்ளியில் மகிழ்ச்சியோடும், உற்சாகத்துடனும், உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X