மண்டல அளவில் கிரிக்கெட்: கோவை அணிக்கு கோப்பை| Dinamalar

மண்டல அளவில் கிரிக்கெட்: கோவை அணிக்கு கோப்பை

Added : பிப் 09, 2020
Share

கோவை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மண்டல அளவில், எஸ்.எஸ்.ராஜன் கோப்பைக்கான, டி-20 கிரிக்கெட் போட்டி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. 'இ' மண்டலத்துக்கான போட்டி, கோவையில் உள்ள பல்வேறு கல்லுாரி மைதானங்களில் நடந்தது. கோவை, திருவண்ணாமலை, திருச்சி, கன்னியாகுமரி, கடலுார் அணிகள் விளையாடின.கோவை அணியும், மதுரை அணியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில் மோதின. முதலில், 'பேட்' செய்த மதுரை அணி பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால், 20 ஓவர்களில், 7 விக்கெட் இழப்புக்கு, 112 ரன் மட்டும் அடித்தனர். கோவை அணியின், சரவணகுமார், மோகன் பிரசாத் இருவரும் தலா, 2 விக்கெட் வீழ்த்தினர்.எளிய இலக்கை 'சேஸ்' செய்த, கோவை அணி, 14.4 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு, 116 ரன் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில், வெற்றி பெற்று, எஸ்.எஸ்.ராஜன் கோப்பையை, கைப்பற்றியது. கோவை அணியின், கவுசிக் ஆட்டம் இழக்காமல், 41 ரன், மணி பாரதி, 38 ரன்கள் அடித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X