யோகாசன போட்டி: மிளிர்ந்த மாணவியர்

Added : பிப் 09, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், மாநில அளவில் களரி மற்றும் யோகாசன போட்டிகள் நடந்தன.வித்யாலயா வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில், ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பொது, மாற்றியமைக்கப்பட்ட உடற்கல்வியியல் மற்றும் யோகா புலம் ஆகியன இணைந்து, இப்போட்டியை நடத்தின.களரி போட்டியில், தனி நபர்களுக்கான வணக்கம் செலுத்துதல் மற்றும் நின்றநிலை பிரிவும், இன்னொரு பிரிவில் கால் பயிற்சி, சிறப்பு குழந்தைகளுக்கான யோகாசன போட்டி நடந்தன. 40 பல்வேறு நிறுவனங்களில் இருந்து, 440 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை, பொது மற்றும் மாற்றியமைக்கப்பட்ட உடற்கல்வியியல் மற்றும் யோகா புலத்தின் தலைவர் கிரிதரன், யோகா பயிற்சியாளர் மாணிக்கம் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X