பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

Added : பிப் 09, 2020
Share
Advertisement

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பியில் குறைந்தளவு அரிசி வழங்குவதை கண்டித்து பொதுமக்கள் ரேஷன் கடை முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புக்கு பின்னால் உள்ள ரேஷன் கடையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்குகின்றனர்.நேற்று காலை வழக்கம்போல் ரேஷன் கடையில் அரிசி வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு வழங்கும் அரிசியில் குறைவான அளவு அரிசி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன்கடை முன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டதற்கு, இந்த முறை அரிசி குறைவாக வந்துள்ளதால் அனைவருக்கும் வழங்கும் நோக்கில் அரிசியை குறைத்து வழங்வதாக கூறினர். அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X