கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேசிய அளவில் லோக் அதாலத்1,248 வழக்குகளுக்கு தீர்வு

Added : பிப் 09, 2020
Advertisement
 தேசிய அளவில் லோக் அதாலத்1,248 வழக்குகளுக்கு தீர்வு

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான லோக் அதாலத் நடந்தது.மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆனந்தி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
தலைமை குற்றவியல் நீதிபதி சுஜாதா, சிவில் நீதிபதி சங்கர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நலம், குற்றவியல், சிவில் சார்ந்த வழக்குகளை 8 அமர்வுகளாக விசாரிக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டது.வழக்குகளை, நீதிபதிகள் எழில், மோகன், செங்கமலச்செல்வன், கோபிநாதன், ராமகிருஷ்ணன், முத்குமாரவேல், உத்தமராஜ், ஓய்வு பெற்ற நீதிபதி தண்டபானி மற்றும் வழக்கறிஞர்கள் ராஜகுரு, தீனதயாளன், காமராஜ், சுந்தரம்பிள்ளை, திருஞானசம்பந்தம் ஆகியோர் விசாரித்தனர்.இதில், மாவட்டம் முழுவதும் வங்கி வாரா கடன்கள் 613 வழக்குகளில் 133 தீர்வு காணப்பட்டடது. இதன் மூலம், ஒரு கோடியே 78 லட்சத்து 36 ஆயிரத்து 302 ரூபாய் வசூலானது. மோட்டார் வாகனம், குற்றவியல், சிவில் மற்றும் குடும்ப நலம் சார்ந்த வழக்குகள் 8,157 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 1,115 வழக்குகளில் 6 கோடியே 35 லட்சத்து 96 ஆயிரத்து 684 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.மொத்தம் 8,770 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, 1,248 வழக்குகளில் 8 கோடியே 14 லட்சத்து 32 ஆயிரத்து 986 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.விக்கிரவாண்டிவிக்கிரவாண்டி கோர்ட்டில் 28 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் ஆயிஷ் பேகம் வழக்குகளை விசாரித்து முடித்து வைத்து 28 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. பார் கவுன்சில் தலைவர் மாரிமுத்து, வழக்கறிஞர்கள் முருகன், பிரகாஷ் பங்கேற்றனர்.திண்டிவனம்திண்டிவனம் கோர்ட்டில் நடந்த முகாமிற்கு, திண்டிவனம் கூடுதல் மாவட்ட நீதிபதி-1 சுபத்ரா தேவி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட நீதிபதி துளசி மோகன் தாஸ் வரவேற்றார். முகாமில், மோட்டார் வாகன விபத்து, சொத்து வழக்கு, வங்கிக்கடன் உள்ளிட்ட 50 வழக்குகளுக்கு ஒரு கோடியே 16 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.திண்டிவனம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் ராஜசிம்மவர்மன், மோட்டார் வாகன தீர்ப்பாய நீதிபதி பிரபாகரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வாசுதேவன், குற்றவியல் நடுவர் நீதிபதி-2 நளினிதேவி மற்றும் பார் அசோசியேஷன் தலைவர் நாராயணன், செயலர் ராம்மனோகர், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் அராங்கு, செயலர் முருகன், வழக்கறிஞர் நல சங்க தலைவர் மோகன்ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X