பொது செய்தி

தமிழ்நாடு

'அரோகரா' கோஷம் விண்ணதிர நடந்த தேரோட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

கோவை:தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் தேரோட்டம், பக்தர்களின் 'அரோகரா' கோஷம் முழங்க நேற்று நடந்தது.கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில், கடந்த, 5ம் தேதி வாஸ்து சாந்தியுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா நேற்று நடந்தது. காலை, 10:30 மணிக்கு, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள் தலைமையில், திருமறை ஓதி, ஆராதனை பூஜை செய்து, பூசணி உடைத்து தேரோட்டம் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சண்முக சுப்பிரமணிய சுவாமியும் வள்ளி, தெய்வானையும் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி. பெருமாள் கோவில் வீதி, என்.எச்., வீதி, பெரிய கடை வீதி வழியாக தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற அவர்களது கோஷத்துக்கு இடையே தேர் அசைந்து ஆடி வந்தது. இதற்காக, டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது.மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், சட்டம், ஒழுங்கு துணை கமிஷனர் பாலாஜி சரவணன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். செயல் அலுவலர் சீனிவாசன், தக்கார் விஸ்வநாதன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X