பொது செய்தி

தமிழ்நாடு

பூலாங்கிணறு-தளி ரோடு அகலப்படுத்தும் திட்டம் இழுபறி: சுற்றுலா பயணிகள், பல கிராம மக்கள் பாதிப்பு

Added : பிப் 09, 2020
Advertisement

உடுமலை:உடுமலை, பூலாங்கிணறு- தளி ரோடு அகலப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப் படாததால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

உடுமலை - கோவை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, பூலாங்கிணறு முக்கோணம் முதல் தளி வரை, 9.4 கி.மீ., துாரம் ரோடு, மாவட்ட இதர சாலை உள்ளது.கோவை, பொள்ளாச்சி வழியாக திருமூர்த்திமலை சுற்றுலா மையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிரதான ரோடாக உள்ளது.

மேலும், இந்த வழித்தடத்தில், வாளவாடி, வேலுார், தென்பூதிநத்தம், மொடக்குப்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள், விவசாய நிலங்கள் உள்ளதால், கிராம மக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல பிரதான ரோடாக உள்ளது.இந்த ரோடு மிகவும் குறுகிய ரோடாகவும், அதிக வளைவுகளுடன் உள்ளதால், போக்கு வரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

வாகன பயன்பாடு மற்றும் விபத்துக்களை கருத்தில் கொண்டு, ஒரு வழிச்சாலையாக உள்ள இந்த ரோட்டை, இரு வழிச்சாலையாக ரோடாக அகலப்படுத்த, இரு ஆண்டுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.இதற்காக, ரோட்டின் இரு புறமும் இருந்த ஆக்கிரமிப்புகள், மரங்கள் அகற்றப்பட்டன. ஆனால், ரோடு பணி தொடர்ந்து மேற்கொள்ளாமல், இழுபறியாகி வருகிறது.

பொதுமக்கள் கூறியதாவது:சுற்றுலா வளர்ச்சிக்கும், மக்கள் பயன்பாட்டிற்கும் இந்த ரோடு பிரதானமாக உள்ளது. கோவை, பொள்ளாச்சி ரோடும், தளியிலிருந்து திருமூர்த்திமலை வரை உள்ள ரோடும், இருவழிச்சாலையாக உள்ளது.இடையில், 9.4 கி.மீ., துாரம் ரோடு மட்டும் குறுகலாக உள்ளது. வாளவாடியில் மட்டும், ஒரு கி.மீ., துாரம் ரோடு அகலப்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு ரோடு விரிவாக்கம் குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இதனால், போக்கு வரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிகரித்து வருகிறது. எதிரே வாகனம் வந்தால், வாகனத்தை ரோட்டிலிருந்து கீழே இறக்க வேண்டியுள்ளது. இரவு சுற்றுலா பயணிகள், கிராம மக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.ரோடு அகலப்படுத்தப் படுவதை காரணம் காட்டி, கடந்த ஐந்து ஆண்டாக ரோடு பராமரிப்பு பணியும் மேற்கொள்ளவில்லை.

ரோடு, குண்டும், குழியுமாக மாறியுள்ளதோடு, ரோட்டின் இரு புறமும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளன. இந்த ரோட்டை அகலப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X