பொது செய்தி

தமிழ்நாடு

லைப் அண்டு ஸ்டைல்

Added : பிப் 09, 2020
Advertisement

மரபுக்கூடல்செம்மை அமைப்பு சார்பில், சூலுார், பாப்பம்பட்டி பிரிவில் உள்ள லட்சுமி திருமண மஹாலில், இன்று காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மரபுக்கூடல் நிகழ்ச்சி நடக்கிறது. பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வகைகள், இயற்கை வேளாண் பொருட்கள், மரபு தின்பண்டங்கள், கைவினை பொருட்கள் விற்கப்படுகின்றன. 'இனிப்பு' ஆவணப்படம் திரையிடல், மதியம், 12:00 மணிக்கும், மரபு சார்ந்த விளையாட்டுகள் மாலை, 4:30 மணிக்கும் நடக்கின்றன.கலைவிழாகோவை கல்ச்சுரல் அகாடமி, 18ம் ஆண்டு விழா, நவஇந்தியா, எஸ்.என்.ஆர்., கலையரங்கில் நடக்கிறது; பாடகி எஸ்.பி., சைலஜா பங்கேற்கிறார். கோவையில் இருந்து, 29க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து குழந்தைகள் கலந்துகொண்டு, சைலஜா பாடல்களை பாடி, ஆடி மகிழ்விக்க உள்ளனர். இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கும் இந்நிகழ்ச்சியில், ஓவியம், பாட்டு, நடனம் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.உணவு தயாரிப்பு பயிற்சிவாழ்வில் எந்த மகிழ்ச்சி கொண்டாட்டங்களிலும், முக்கியமாக இடம்பெறுபவை கேக்குகள். 'கேக் மை டே' சார்பில் கேக் தயாரிப்பு குறித்து ஒரு நாள் பயிலரங்கு, ராமலிங்கா நகர், சாய்பாபா காலனியில் இன்று நடக்கிறது. காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் இப்பயிலரங்கில், பழங்கள், வெண்ணிலா, சாக்லேட், லெமன், சீஸ் என, பல்வேறு பிளேவர்களில் கேக் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது; முன்பதிவு செய்வது அவசியம்.நுால் வெளியீடுகோவை வேளாண் பல்கலை முன்னாள் இயக்குனர் சதாசிவம் எழுதிய, 'போதி மரத்தடியில்' என்ற நுால் வெளியீட்டு விழா, இன்று மாலை, 6:00 மணிக்கு, அண்ணாதுரை சிலை அருகில் உள்ள ஆரூத்ரா ஹாலில் நடக்கிறது. நுாலை, டாக்டர் கு.சிவராமன் வெளியிடுகிறார். வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார், கேரளா திருச்சூர் வேளாண் பல்கலை துணைவேந்தர் சந்திரபாபு, ஏ.வி.குழுமம் தலைவர் வரதராஜன், நன்னெறிக்கழக தலைவர் இயகோகா சுப்ரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.சுழலும் சொல்லரங்கம்கம்பன் கழகம் சார்பில், 48வது கம்பன் விழா, கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள இந்திய தொழில் வர்த்தகசபை அரங்கில் நேற்று துவங்கியது. இரண்டாவது நாளான இன்று காலை, 9:45 மணிக்கு, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கும், 'சுழலும் சொல்லரங்கம்' நிகழ்ச்சி நடக்கிறது. கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர் தலைமை ஏற்கிறார். 'ஆரண்ய காண்டத்தில் யாருடைய செயல்பாடு கற்போர் நெஞ்சை பெரிதும் ஈர்க்கின்றன' என்ற தலைப்பில், ஆறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பேசுகின்றனர்.ஜொலிக்கும் கண்காட்சிகோவை, அவிநாசி ரோட்டில் உள்ள ரெசிடென்சி ஓட்டலில் நகை விற்பனை கண்காட்சி நடக்கிறது. இன்று காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை நடக்கும் இந்த கண்காட்சியில், டில்லி, மும்பை, கோல்கட்டா, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட நகை விற்பனையாளர்கள் ஸ்டால் அமைத்து, நகைகளை காட்சிப்படுத்தி உள்ளனர். அனுமதி இலவசம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X