பொது செய்தி

தமிழ்நாடு

மணமக்களுக்கு அமைச்சர் வாழ்த்து

Added : பிப் 09, 2020
Advertisement
 மணமக்களுக்கு அமைச்சர் வாழ்த்து

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., நகர செயலர் பாபுவின் மகன் மற்றும் மருமகளை அமைச்சர்சண்முகம் நேரில் வாழ்த்தினார்.கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., நகர செயலர் பாபு - முன்னாள் எம்.எல்.ஏ., அழகுவேலு பாபு தம்பதி மகன் கற்பக விநாயகா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கவுதமிற்கும்; சென்னை வெங்கடேஷ் - நிர்மலா தம்பதி மகள் நந்தினிக்கும் கடந்த 27ம் தேதி திருப்பதியில் திருமணம் நடந்தது.இதனையடுத்து நேற்று, அமைச்சர் சண்முகம் மணமக்கள் வீட்டிற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.எம்.எல்.ஏ.,க்கள் குமரகுரு, பிரபு, தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இணைய தலைவர்ராஜசேகர், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட ஜெ., பேரவை முன்னாள் தலைவர் ஞானவேல், நகர செயலர் ஷியாம்சுந்தர், கூட்டுறவு கட்டட சங்க தலைவர் வேணுகோபால் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X