பொது செய்தி

தமிழ்நாடு

காமாட்சியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா

Added : பிப் 09, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை காமாட்சியம்மன் கோவிலில், லட்சார்ச்சனை பெருவிழா நடந்தது.உடுமலை காமாட்சியம்மன் கோவில் வீதியில், ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் சமேத விஸ்வகர்ம காமாட்சியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், 4ம் ஆண்டு லட்சார்ச்சனை பெருவிழா, கடந்த 5ம் தேதி மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், முதல் கால லட்சார்ச்சனை நடந்தது.கடந்த 6ம் தேதி நான்காம் கால லட்சார்ச்சனை, ஸ்ரீ பகவதிசேவா, 108 சங்கு ஸ்தாபனம், ஸ்ரீ தேவி மஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது. மாலையில் திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும், பூரண நலம்பெறவும், தொழில் வளம் பெருகவும், சிறப்பு யாகம் நடந்தது.

நேற்றுமுன்தினம் அஷ்டலட்சுமி ஹோமம், சர்வ மங்களாம்பிகாஹோமம், துர்காஹோமம், சுயம்பர கால பார்வதிஹோமம் மற்றும் 5ம் கால லட்சார்ச்சனை இடம் பெற்றது.மதியம், 108 சங்காபிேஷகமும், மாலையில் சுமங்கலி பூஜையும், இரவு காமாட்சியம்மனின் நெய்குள தரிசனம், புஷ்பாஞ்சலி, மகாதீபாராதனை நடக்கிறது. இதில், திரளான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ விஸ்வகர்ம காமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள், விஸ்வகர்ம மஹாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X