பொது செய்தி

தமிழ்நாடு

குமரன் குன்றில் கோலாகலம்

Added : பிப் 09, 2020
Advertisement

அன்னுார்:அன்னுார் அடுத்த குமரன்குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா, கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் வரை, தினமும் காலை, 10:00 மணிக்கு சுவாமி கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கல்யாண சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.காலை, 7:30க்கு, வள்ளி, தெய்வானை சமேதரராக கல்யாண சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளினார். மாலை, 5:30க்கு தேரோட்டம் துவங்கியது. அன்னுார், சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை பகுதியை சேர்ந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் மீது பக்தர்கள் பழங்களை வீசி, 'முருகனுக்கு அரோகரா' என கரகோஷம் எழுப்பினர்.முன்னதாக, சிறிய விநாயகர் தேரும் சென்றது. திடும் இசை குழுக்களுடன், பக்தி பாடல்களுக்கு நடனமாடியபடி பக்தர்கள் சென்றனர். இன்று காலை, கோவில் வளாகத்தில் காவடிகளை சமர்ப்பித்தல் மற்றும் பஜனை நடக்கிறது. இரவு பரிவேட்டை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X