பொது செய்தி

தமிழ்நாடு

பக்தர் வெள்ளம்; திணறியது மருதமலை!

Added : பிப் 09, 2020
Advertisement
 பக்தர் வெள்ளம்; திணறியது மருதமலை!

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது; முறையான ஏற்பாடுகள் செய்யாததால், பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர்.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா நேற்று நடந்தது. வழக்கத்தை விட, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவையொட்டி, வடவள்ளியில் இருந்து மருதமலை வரை, வழிநெடுகிலும், தன்னார்வலர்கள் அன்னதானம் வழங்கினர். வடவள்ளி போலீசார் சார்பில், பானாகரம் வழங்கப்பட்டது.அடிவாரத்தில் இருந்து மலைக்கு அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பொதுமக்களின் கார், பைக்குகள் அனுமதிக்கப்படவில்லை. தேவஸ்தானம் சார்பில், மூன்று பஸ்கள், போக்குவரத்து கழகம் மூலம், 4 பஸ்கள் இயக்கப்பட்டன. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் காணப்பட்டனர்.அடிவாரத்தில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. கோவிலுக்கு செல்லும் சிறப்பு வழி மற்றும் பொது வழிகள் குறித்தும், உள்ளே செல்லும் வாயில், வெளியேறும் வாயில்கள் குறித்தும், முறையான அறிவிப்பு பலகை வைக்காததால், பக்தர்கள் கூட்ட நெரிசலில், சிக்கி தவித்தனர்.வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் விழா; லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் விழாவுக்கு, 80 போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் அவர்கள் திணறினர். பக்தர்கள் பலரும் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். விடுமுறை தினம் என்பதால், இன்றும் ஏராளமான பக்தர்கள் திரள்வர் என்பதால், கூடுதலாக போலீசார் பணியமர்த்த வேண்டும்.மூச்சுத்திணறல் பெண் உயிரிழப்புகோவை, சவுரிபாளையத்தை சேர்ந்த செந்தாமரை, 42 என்பவர், உறவினர்களுடன் நேற்று கோவிலுக்கு வந்திருந்தார். படிக்கட்டு வழியாக நடந்து, பழைய அன்னதானம் மண்டபம் அருகே சென்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கம் அடைந்தார். உண்டு உறைவிட பள்ளியில் இருந்த மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர், கோவை அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். அங்கு பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். வடவள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X