கஞ்சா விற்ற பெண்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்ற பெண்கள் கைது

Added : பிப் 09, 2020
Share

விழுப்புரம்:விழுப்புரத்தில் கஞ்சா விற்ற பெண்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம், கம்பன் நகர் பஸ் நிறுத்தம் அருகே தாலுகா இன்ஸ்பெக்டர் கனகேசன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இரு பெண்களை போலீசார் பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர் அதில், ஒரு கிலோ கஞ்சா இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.விசாரணையில், அவர்கள் இருவரும், விழுப்புரம், கிழக்கு புதுச்சேரி சாலை, மணிமேகலை தெருவை சேர்ந்த கலையரசன் மனைவி விஷ்ணுபிரியா, 21; விழுப்புரம், கம்பன் தெருவை சேர்ந்த சண்முகவேல் மனைவி செல்வி,47; என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து, இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X