மாணவர்களின் விடியலுக்காக பல்லடம் அரசு பள்ளியில் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களின் விடியலுக்காக பல்லடம் அரசு பள்ளியில் அசத்தல்

Added : பிப் 09, 2020
Share
பாட்டுக்கொரு புலவன் பாரதி, சொன்ன வழியிலேயே, அனைத்து மாணவர்களின் முன்னேற்றத்துக்காக, சிறப்பு வகுப்புகள் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எடுக்கப்பட்டு வருகின்றன. 600 மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்கும் முயற்சியாக, பள்ளி ஆசிரியர்கள் இரவு நேர சிறப்பு வகுப்பு நடத்தி
 மாணவர்களின் விடியலுக்காக  பல்லடம் அரசு பள்ளியில் அசத்தல்

பாட்டுக்கொரு புலவன் பாரதி, சொன்ன வழியிலேயே, அனைத்து மாணவர்களின் முன்னேற்றத்துக்காக, சிறப்பு வகுப்புகள் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எடுக்கப்பட்டு வருகின்றன. 600 மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்கும் முயற்சியாக, பள்ளி ஆசிரியர்கள் இரவு நேர சிறப்பு வகுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த முயற்சி குறித்து, பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:விரைவில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. கடந்த காலங்களில் பெற்ற குறைந்த தேர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு 100 சதவீதம் தேர்ச்சி கொண்டு வர வேண்டும் என்று எண்ணினோம்.அதன்படி, சி.இ.ஓ., உத்தரவு பெற்று, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், கற்றலில் சற்று பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு தினமும் இரவு நேர சிறப்பு வகுப்பு எடுத்து வருகிறோம். மாலை, 5:30 முதல் இரவு, 8:30 மணி வரை சிறப்பு வகுப்பு நடைபெறும். தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால், வெளியிலிருந்து தற்காலிக ஆசிரியர்களை நியமித்து, அவர்களுக்கும் நாங்களே சம்பளம் வழங்கி வருகிறோம்.மாணவர்களுக்கு தேவையான இரவு உணவை, நாங்களே ஏற்பாடு செய்தோம். இரவு நேர சிறப்பு வகுப்பை கண்காணிப்பதற்காக தலைமையாசிரியர், மற்றும் உதவித் தலைமை ஆசிரியர்களும் தினமும் மேற்பார்வையிட்டு செல்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாணவர்களை ஊக்குவிக்கும்வண்ணம், முன்னாள் மாணவர்கள் சார்பில, தொடர்ந்து, 30 நாட்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் சிலர், விளக்கு வசதி உள்ளிட்டவற்றையும் செய்து கொடுத்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இரவு நேர சிறப்பு வகுப்பு குறித்து அறிந்த பல்லடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், மற்றும் முன்னாள் மாணவர்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படும், என அறிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X