பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி அதிகாரி வேலையை உதறினார்...

Added : பிப் 09, 2020
Share
Advertisement
 வங்கி அதிகாரி வேலையை உதறினார்...

"இந்தக் காலத்துல வேலை கிடைக்கிறதே ரொம்ப கஷ்டம்; அதுவும் கிடைத்த வேலையை யாராவது விடுவாங்களா..."'கண்டிப்பாக விடமாட்டாங்க... இப்படித்தானே சொல்ல தோன்றும்.ஆனால், கிடைத்த வங்கி மேலாளர் பதவியை உதறிவிட்டு, தொழில் முனைவோராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார் ஒரு இளைஞர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு கலைக்கல்லுாரி வணிகவியல் (சர்வதேச வணிகம்) துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, மாணவ மாணவியருக்கான தன்னம்பிக்கை பயிலரங்கில் கருத்தாளராக பங்கேற்ற, கோவையைச் சேர்ந்த சசிக்குமார் சிவசுப்ரமணியம் என்பவர் தான் அந்த இளைஞர்.ஒரு தனியார் நிறுவனத்தில், முதன்மை செயல் இயக்குனராக பணியாற்றி வரும் அவர், தனது அனுபவத்தை யதார்த்தமாக நம்மிடம் பதிவு செய்தார்."2007ல் எம்.பி.ஏ., முடித்து, வங்கி சார்ந்த, போட்டி தேர்வெழுதினேன். பாரத ஸ்டேட் வங்கியில், துணை மேலாளர் பதவி கிடைத்தது. உள்மனதில், வெற்றிகரமான தொழில் முனைவோராக வர வேண்டும் என்ற எண்ணம், ஆழமாக வேரூன்றியிருந்தது. 2008ல் நான்கு வருடத்திற்கு விடுமுறை கடிதம் எழுதி, கொடுத்தேன்.என் நண்பர், டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். 'டிஜிட்டல் லாக்கர் சிஸ்டம்' எனப்படும், மொபைல் போன் மூலம், நமது வீடு, அலுவலகத்தின் பூட்டை திறக்கும் உபகரணத்தை தயாரித்து வருகிறார். அதை சந்தைப்படுத்தும் பொறுப்பேற்றேன்.டில்லி, மும்பை என, நாட்டின் பல இடங்களுக்கும் சென்று, வர்த்தகத்தை விரிவுபடுத்தினேன்.இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா என, வெளிநாடுகளுக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்தினேன். எனக்கு கீழ், 25 பேர் பணியாற்றுகின்றனர்.லாபத்திற்காக மட்டுமல்லாமல், அவர்களையும் ஒரு தொழில் முனைவோராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊக்குவித்து வருகிறேன். நமது குறிக்கோளை, ஒரு சிறிய அட்டையில் எழுதி பாக்கெட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது எடுத்து பார்த்துக் கொள்வதன் மூலம், நமது உழைப்பின் திறனை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம், குறிக்கோளை மிக எளிதாக, விரைவாக எட்ட முடியும்.சசிக்குமார் சிவசுப்ரமணியத்தின் வார்த்தைகளில் ஆர்வம் பீறிடுகிறது.தனது பாக்கெட்டில் வைத்திருந்த குறிக்கோள் அட்டையை எடுத்து காட்டுகிறார். அதில், ''எனது வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ நான் உதவுகிறேன். இதன் மூலம், 2020ல், 1.23 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.''கல்லுாரி மாணவ, மாணவியர்க்கு இலவசமாக தன்னம்பிக்கை ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். அவர்கள் விரும்பினால், தொழில் முனைவோராக மாற்றவும் தயாராக இருக்கிறேன்'' என்கிறார் சசிக்குமார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X