பொது செய்தி

தமிழ்நாடு

சுத்தம் குறித்த ஆய்வு

Added : பிப் 09, 2020
Advertisement

அனுபவத்தையே ஆய்வுக் கட்டுரையாக்கி, அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மாநில அளவில் தடம் பதித்து வந்திருக்கின்றனர்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், அரசுப்பள்ளி மாணவ மாணவியரின் அறிவாற்றலுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கில், சிறப்பு செயல் திட்டம் நடைமுறையில் உள்ளது.இதில், பாட வாரியாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்க செய்து, அதில் சிறந்த மாணவர் குழுவினருக்கு விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.ஆங்கில பாடப்பிரிவில், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் குழு, மாநில அளவில் முதலிடத்தை தக்க வைத்து, விருது பாராட்டு சான்றிதழை பெற்று வந்திருக்கின்றனர்.மாணவி அனீஷ் பாத்திமா, குழு தலைவராக செயல்பட மாணவியர் பூஜாஸ்ரீ, ஜனனி, ஷாலினி, மீரா ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டனர். பள்ளி தலைமையாசிரியை மெஹருன்னிசா ஊக்குவிப்பில் ஆங்கில ஆசிரியைகள் ஜெயலட்சுமி, ருக்மணி, ஜெயசித்ரா ஆகியோர், ஆய்வுக்கட்டுரை தயாரிக்க அறிவுரை, ஆலோசனைகளை அள்ளி வழங்கினர்.அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை, மாநில அளவில் முதலிடத்தை தக்க வைத்திருக்கிறது.அப்படி என்ன விசேஷம் அந்த ஆய்வுக் கட்டுரையில்... அக்குழுவினரே விவரிக்கின்றனர்.சுத்தம், சுகாதாரம் குறித்து ஆய்வுக் கட்டுரை தயாரித்தோம். எங்கள் பள்ளி மாணவியர் பலர், அடிக்கடி விடுமுறை எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். காரணத்தை ஆராய்ந்த போது, அடிக்கடி அவர்கள் உடல் உபாதையால் அவதிப்படுவது தெரியவந்தது.அதற்கான காரணத்தை, அவர்களது வீடுகளுக்கே சென்று ஆராய்ந்த போது, அவர்கள் வசிப்பிடம், சுற்றுப்புறம், சுத்தம், சுகாதாரமாக இல்லை என்பது தான் காரணம் என, தெரியவந்தது.வசிப்பிடத்தை சுற்றி குப்பை குவியல், டயர் உள்ளிட்ட பொருட்களை எரியூட்டுவதால் எழும் புகை, ஆகியவற்றை கண்கூடாக காண முடிந்தது.சுத்தம், சுகாதாரமாக இருந்தால் மட்டுமே, உடல் உபாதை ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில், ஆய்வுக்கட்டுரை தயாரித்தோம். இதற்காக அவிநாசி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உதவியுடன், சில விழிப்புணர்வு முகாம்களையும், குடியிருப்பு பகுதிகளில் நடத்தினோம். பிரச்னைக்கான காரணத்தை ஆராய்ந்து, அதற்கான தீர்வை விளக்கினோம்.மக்கும் மற்றும் மக்காத குப்பை என, பிரித்தெடுத்து, குப்பையில்லா நிலையை உருவாக்க வேண்டும் என்பதை மிக ஆழமாக, பதிவு செய்தனர் எம் மாணவியர் குழுவினர். இதுவே, வெற்றிக்கு வித்திட்டதுஇவ்வாறு, அவர்கள் கூறினார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X