பொது செய்தி

தமிழ்நாடு

'கந்தனுக்கு அரோகரா' கோஷம் முழக்கம்: தைப்பூச தேரோட்டம் கோலாகலம்

Added : பிப் 09, 2020
Advertisement

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி, ஊத்துக்குளி வெற்றிவேலாயுதசுவாமி, மலைக்கோவில் ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவிலில், 'அரோகரா' கோஷத்துடன், தைப்பூச தேரோட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில்; ஊத்துக்குளி, கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில்களில், தைப்பூச தேர்த்திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நிறைவுற்று, மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை, மங்கள வாத்திய இசையுடன் திருவீதியுலா சென்று, தேர்தலில் அமர்ந்து, பக்தர்களுக்கு காட்சிகொடுத்தனர். மாலை, 3:00 மணிக்கு, மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் முன்னிலையில், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி தேர், முதல் நிலையை அடைந்து, தீபாராதனை நடந்தது. மற்ற கோவில்களில், தேர் நிலையை வந்தடைந்ததும், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களின் 'அரோகரா' கோஷத்துடன், முருகநாதர் அமர்ந்த தேர்கள் பவனி வந்தன.அலகுமலைஅலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., நடராஜன் வடம்பிடித்து துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, 'முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா' என்ற கோஷம் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்பணிக்குழு தலைவர் சின்னு, செயல் அலுவலர் சீனிவாசன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், இன்று சுவாமி திருவீதி உலா, மாலை பரிவேட்டை, நாளை மாலை மண்டப கட்டளை, 11ம் தேதி தரிசனம், அன்னதானம், மாலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.அவிநாசிஅவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று தைப்பூச வழிபாடு நடந்தது.
கோவிலிலுள்ள சுப்ரமண்ய பெருமானுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, சுப்ரமணியர், வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 5:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சிறுவர், சிறுமியர், 'அரோகார' கோஷமிட்டு, தேர் இழுத்தனர்.கோவில் செயல் அலுவலர் லோகநாதன், பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.அவிநாசி, கஸ்துாரிபாய் வீதியில், பாலதண்டாயுதபாணி தைப்பூசம் வழிபாட்டு குழுவின், இரண்டாம் ஆண்டுவிழா, நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை, 9:00 மணிக்கு, கஸ்துாரிபாய் வீதி, செல்வ விநாயகர் கோவிலில் அபிஷேகம், காவடி, பால்குடம் ஊர்வலம் ஆகியவை நடந்தது.- நமது நிருபர்கள் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X