பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் நடித்த குறும்படம்

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 மாணவர்கள் நடித்த குறும்படம்

பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் இணைந்து, 'விதிகளை மதி' என்ற சாலை பாதுகாப்பு குறித்த குறும்படம் தயாரித்துள்ளனர். அதில் மாணவர்களே நடித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.பள்ளி தலைமை ஆசிரியை விண்ணரசி கூறியதாவது:பள்ளியில், என்.சி.சி., சுற்றுச்சூழல் மன்றம் உள்ளிட்டவற்றை போன்று, சாலைப் பாதுகாப்பு அமைப்பும் எங்கள் பள்ளியில் உள்ளது. சமூக அறிவியல் ஆசிரியை லுார்து ஆரோக்கிய அமலா, அந்த அமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார்.அதன்படி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறும்படம் தயாரிக்க திட்டமிட்டோம். மாணவர்கள் நடிக்க, தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன், வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டது. நான்கு நிமிடங்கள் மட்டுமே ஓடும் அக்குறும்படத்தின் மூலம், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.வழக்கமாக, பேரணி, மற்றும் மனித சங்கிலி உள்ளிட்டவற்றின் மூலம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 31வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வந்ததால், அதை முன்னிட்டு, குறும்படத்தை தயாரித்து வெளியிட்டோம்.இவ்வாறு அவர்கூறினார்.மாணவர்கள் தயாரித்த அக்குறும்படத்தை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் வெளியிட்டார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பழனிசாமி, மற்றும் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-பிப்-202008:49:15 IST Report Abuse
Prakash Krishnamurthi என்ன தான் குறும் படம் எடுத்தாலும் காவல்துறையினரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் அவர்கள் பின்பற்றாமல் பொதுமக்களை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பது சரியல்ல...மேலும் நேர்மையாக செயல்பட்டு ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்து மட்டுமே ஆடுமந்தை போல் வாகனம் இயக்கும் போது மக்கள் திருந்துவார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X