பொது செய்தி

தமிழ்நாடு

'ஒபோஸ்' முறை சமையல் பயிற்சி

Added : பிப் 09, 2020
Advertisement

திருப்பூர்:திருப்பூரில், 'ஒபோஸ்' முறையில் எளிதாக சமையல் எப்படி செய்வது குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.'வெற்றி' அமைப்பு, வனத்துக்குள் திருப்பூர் சார்பில், 'ஒன் பாட் ஒன் ஷாட்' என்ற முறையில் எவ்வாறு சமையல் செய்யலாம் என்ற பயிற்சி வகுப்பு திருப்பூர் மங்கலம் ரோட்டில் உள்ள அறப்பொருள் வேளாணகம், கிளாசிக் பார்ம்சில் நேற்று நடந்தது.'ஒன் பாட் ஒன் ஷாட்' என்பதன் சுருக்கமே ஒபோஸ். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுகளை குறுகிய நேரத்தில் அல்லது தண்ணீரே இல்லாமல் அதிக வெப்பத்தில் தயார் செய்வது தான், இந்த அறிவியல் சமையல் முறை.ஒபோஸ் புகர் ராமகிருஷ்ணன், ஆரோக்கியம் நல்வாழ்வு நிர்வாகி சங்கர்ஜி, தன்னார்வலர் கண்ணன் அழகிரிசாமி ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.இதில், கேரட் அல்வா, கீரை பொரியல், பீட்ரூட் பொரியல், அவியல், கூட்டு, வெஜ் பிரியாணி உள்ளிட்ட உணவுகள் குறைந்த நேரத்தில், சுவையாக எப்படி செய்வது என பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X