பொது செய்தி

தமிழ்நாடு

'பின்னலாடை துறையை உயர்த்தும் இளைஞர் சக்தி!' கருத்தரங்கில், முன்னாள் ஐ.ஜி., 'பளீச்'

Added : பிப் 09, 2020
Advertisement
 'பின்னலாடை துறையை உயர்த்தும் இளைஞர் சக்தி!' கருத்தரங்கில், முன்னாள் ஐ.ஜி., 'பளீச்'

திருப்பூர்:திருப்பூரில் நேற்று நடந்த 'வெற்றிப்பாதையில் திருப்பூர் - 2020' தன்னம்பிக்கை கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் போலீஸ் ஐ.ஜி., பாரி பேசியதாவது:இந்தியாவின் புகழை உலகமெங்கும் பரவச்செய்துள்ளது, திருப்பூர். பின்னலாடை தொழில் வளர்ச்சியால் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கிறது.சுதந்திர போராட்டத்தின்போது தமிழகத்தில்தான் மிகப்பெரியவேள்வி நடந்தது. விடுதலைக்காக போராடிய குமரன் பிறந்த மண், இது.திருப்பூர் பின்னலாடை துறை ஐந்து ஆண்டுகளில், மூன்று மடங்காக பிரமிக்கத்தக்க வர்த்தக வளர்ச்சி கண்டுள்ளது. தொழில்முனைவோரிடம், தொழில் திறன் அதிகம் உள்ளது. தொழில் பிரச்னையில் உள்ளது என்கின்றனர். நீங்கள் கடந்த பாதையே இன்னல் நிறைந்ததுதானே.சோதனைகளை எதிர்கொண்டு, மீண்டும் வெற்றிக்கொடி நாட்டவேண்டும். பொருள்தான் எல்லாவற்றுக்கும் மூலதனம். பொருளுக்கு அடிப்படை, அறிவு. அறிவுக்கு அடிப்படை அனுபவம். அனுபவம் என்பது, நாம் படுகிற அவமானங்களிலிருந்துதான் கிடைக்கிறது. தோல்விகள்தான், நம்மை செதுக்குகின்றன.எங்கே தோல்வி ஏற்பட்டதோ, அந்த இடத்தில் அசைக்கமுடியாத சக்தியாக விஸ்வரூபம் எடுத்து எழுந்து நிற்கவேண்டும். ஆடை உற்பத்தியில் தரம் மிக முக்கியமானது.தொழில்நுட்ப திறன் மிக்கவர்களை, தொழில்முனைவோர் தன்வசப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும்; தொழில் வளர்ச்சிக்கு இது கைகொடுக்கும்.தொழில்முனைவோரை மட்டுமல்ல, அனைவரையும் வழிநடத்துவது, தன்னம்பிக்கை என்கிற தாரகமத்திரம்தான். அடுத்த தலைமுறையினர் இந்த தொழில் துறையில் கால்பதிப்பதற்கு வழிவிட வேண்டும்.தலைவர்கள், பொறுப்புக்களையும், அதிகாரத்தையும் பகிர்ந்தளித்தால்தான் அந்த நிறுவனம் வளர்ச்சி பெறும். இளைஞர்களின் சிந்தனை, முயற்சிகள் புதுமையானதாக இருக்கும்; அது, தொழிலை அடுத்த நிலைக்கு உயர்த்தும்.எந்த நாட்டிலும் இல்லாத அளவில், நமது நாட்டில் 65 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர்.தொழில் துறையில் இளைஞர் சக்தியை புகுத்தினால், பனியன் துறையில் உலகமே வியக்கும்வகையிலான புதிய புரட்சி உருவாகும்; லட்சம் கோடி வர்த்தக இலக்கை அடைவதும் எளிதாகும்.இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, நிட்மா சங்க தலைவர் ரத்தினசாமி, நிப்ட்---டீ கல்லுாரி தலைவர் மோகன், ஸ்ரீபுரம் அறக்கட்டளை தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தனர். ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் பழனிசாமி வரவேற்றார். பொது செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X