பொது செய்தி

தமிழ்நாடு

'இம்பார்ட்' ஆய்வறிக்கை போட்டி; திருப்பூர் பள்ளிகள் முதலிடம்

Added : பிப் 09, 2020
Advertisement

திருப்பூர்:பள்ளி மாணவர்களுக்காக நடந்த மாநில அளவிலான, 'இம்பார்ட்' ஆய்வறிக்கை போட்டியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளிகள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளன.அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், 'இம்பார்ட்' எனும் சிறப்பு செயல்திட்டம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் செயல்படுத்தப்படுகிறது.ஒவ்வொரு பள்ளியிலும், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை கொண்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என பாட வாரியாக ஐந்து குழுக்கள் உருவாக்கப்படும்.இக்குழு வகுப்பறைக்கு வெளியே சென்று கற்றுக்கொள்ளும்படி பயனுள்ள தலைப்பு ஒன்று வழங்கப்படும். குழுவுக்கு ஒரு ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பார். சம்பந்தப்பட்ட இடங்களுக்கு இம்மாணவர் குழு நேரில் சென்று அங்குள்ள நடவடிக்கைகளை அறிந்து அறிக்கை ஒன்றை தயார் செய்ய வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தின், 13 ஒன்றியங்களில் இருந்தும், மாணவர்கள் ஆர்வத்துடன் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். இதில் சிறந்த ஆய்வறிக்கை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கலில் நடந்த இப்போட்டியில், திருப்பூரை சேர்ந்த, மூன்று பள்ளிகள் மாநில அளவில் சிறந்த அறிக்கைக்கான விருதுகளை பெற்றன.அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆங்கிலத்தில் முதலிடத்தையும், அறிவியல் பாடத்தில் பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் பிடித்து அசத்தியது. ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தமிழ் பாடத்தில் மாநில அளவில் மூன்றாம் இடத்தை வென்றது.திருப்பூர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் உதவி ஒருங்கிணப்பாளர் கணேஷ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X