பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' தடுப்பு கருத்தரங்கு: அரசு, தனியார் டாக்டர்கள் பங்கேற்பு

Added : பிப் 09, 2020
Advertisement

திருப்பூர்:'கொரோனா' நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு தயாராகும் வகையில், அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் இடையே கருத்தரங்கு நடத்தப்பட்டது.'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்க, சுகாதாரத்துறையால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மருத்துப் பணிகள், சுகாதாரப் பணிகளில் பணிபுரியும் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 'கரோனா' நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.நோய் தடுப்பு பணிக்கு, தனியார் டாக்டர்களின் பங்களிப்பும் அவசியம் என்பதால், அவர்களை ஒன்றிணைத்து, கருத்தரங்கு நடத்தப்பட்டும் வருகின்றனர்.அதன்படி, திருப்பூர் இந்திய மருத்துவ சங்க டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணிகள் டாக்டர்கள் இடையிலான விழிப்புணர்வு கருத்தரங்கு, நேற்று நடந்தது.கணியாம்பூண்டி, ஐ.எம்.ஏ., அரங்கில் நடந்த இக்கருத்தரங்கிற்கு, திருப்பூர், இந்திய மருத்துவர் சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.மருத்துவ கல்லுாரி 'டீன்' நிர்மலா, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி, சுகாதாரப்பணிகள் துணை ஜெகதீஷ், நகர்நல அலுவலர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மொத்தம், 180 டாக்டர்கள் கலந்து கொண்டனர். உலக சுகாதார நிறுவன ஒருங்கிணைப்பாளர் நேமிநாதன், கரோனா நோய் பாதிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.திருப்பூர் இந்திய மருத்துவ சங்க செயலாளர் ராஜ்குமார், பொருளாளர்ரமேஷ், டாக்டர்கள் கோபால கிருஷ்ணன், சோமசுந்தரம் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X