பொது செய்தி

தமிழ்நாடு

வெற்றிப்பாதையை பிரகாசமாக மாற்றி கொள்ளுங்கள்!

Added : பிப் 09, 2020
Share
Advertisement

ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் வேலுசாமி, வரவேற்று பேசியதாவது:திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி, 1990ல், 290 கோடி ரூபாயாக இருந்தது; 2003ல், 5,000 கோடியாகவும், 2015-16ல், 23 ஆயிரம் கோடியாகவும் உயர்ந்தது. நமது இலக்கு, ஒரு லட்சம் கோடி என்பதால், மேலும் முயற்சி அவசியம்.இந்தியாவின், ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூரின் பங்களிப்பு, 46 சதவீதமாக இருக்கிறது. இலக்கை எட்டிப்பிடிக்க, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறிய, நான்கு விதிகளை கடைபிடித்தால் மட்டுமே, வெற்றிகளை குவிக்க முடியும்.திருப்பூர் தொழில்துறையினர், தொழில் நடத்த, 60 சதவீத நேரத்தையும், தொழில் மேம்பாட்டுக்கு, 40 சதவீதத்தையும் செலவிட வேண்டும். ஆனால், முழு நேரத்தையும், ஆர்டர் அனுப்பவே செலவிடுகிறோம். மெழுகுவர்த்தியை கொண்டு, குத்துவிளக்கை ஏற்றி வைக்கிறோம்; விளக்கில் உள்ள எண்ணெய், திரியில் தீபம் எரிகிறது.வெற்றிப்பாதையில் திருப்பூர் என்ற வழிகாட்டும் நிகழ்ச்சி, மெழுகுவர்த்தி போன்றது. அதைப்பயன்படுத்தி, தொழில்துறையினரின் வெற்றிப்பாதையை பிரகாசமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X