பொது செய்தி

தமிழ்நாடு

20 சதவீத வளர்ச்சி எளிதே!

Added : பிப் 09, 2020
Share
Advertisement

திருப்பூர்:மும்பையை சேர்ந்த 'வசீர்' ஆலோசனை நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குனர் சுரேந்தர் ஜெயின் பேசியதாவது:உலகளாவிய, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், இந்தியாவுடன், வியட்நாம், பங்களாதேஷ் நாடுகள் அதிக போட்டியில் உள்ளன. சீனாவும் கடும் போட்டியை உருவாக்கி வந்தது; சீனா தற்போது பின்தங்கியுள்ளது. கடந்த, 2015 வர்த்தக அளவுடன் ஒப்பிடும் போது, சீனாவின் பின்னலாடை ஏற்றுமதி குறைந்துள்ளது.பங்களாதேஷ், வியட்நாம் நாடுகளில் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது. இந்தியாவின், ஏற்றுமதி மதிப்பு குறைவாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், குறிப்பிட்ட கால இடைவெளியில், ஐரோப்பியா, அமெரிக்கா, ஜப்பான், கொரியா, கனடா உள்ளிட்ட நாடுகள், 47,000 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.அவற்றில், சீனா, 11,800 கோடி ரூபாய் அளவுக்கு, வர்த்தகம் செய்துள்ளது. பங்களாதேஷ், வியட்நாம் நாட்டைவிட, இந்தியா மிக குறைவாக, 1600 கோடி ரூபாய்க்கு மட்டுமே அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.மின்கட்டணம், தொழிலாளர் சம்பளம் போன்ற செலவினம், இந்தியாவை விட சீனாவில் உயர்ந்துள்ளது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள், உற்பத்தி திறன் மற்றும் தரம் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தற்போதுள்ள சர்வதேச சந்தை நிலவரத்தை பார்க்கும் போது, உற்பத்தி திறனை அதிகரித்து, செலவுகளை கட்டுப்படுத்தினால், இந்தியா, 20 சதவீத வளர்ச்சி பெறுவது எளிதாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X