பொது செய்தி

தமிழ்நாடு

குன்னுாரில் கூட்டு துப்புரவு பணி

Added : பிப் 09, 2020
Advertisement

குன்னுார்:குன்னுார் நகராட்சி சார்பில், 'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க சிறப்பு கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.சீனாவை அச்சுறுத்தி வரும் 'கொரோனா' வைரஸ், 17 நாடுகளில் பரவி வருகிறது. கேரளாவில் மூவருக்கு வைரஸ் தாக்கிய நிலையில், பந்தலூர், கூடலூர் வழியாக நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, குன்னுார் நகராட்சி சார்பில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும், நீலகிரி மலை ரயில், ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட்களில், சிறப்பு கூட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும், சுகாதாரமாக தங்களது பகுதிகளை வைத்து கொள்ள, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X