சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மைக்ரோ பைனான்ஸ்' சர்ச்சை :போலீசார் தீவிர விசாரணை

Added : பிப் 09, 2020
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரியில் இயங்கிவரும் 'மைக்ரோ பைனான்ஸ்' ஊழியர்களின் அத்துமீறலை கண்டித்து, பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.கோத்தகிரி ஜக்கனாரை பகுதியை சேர்ந்த, ஒரு குடும்ப பெண், கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் உள்ள ஒரு 'மைக்ரோ பைனான்ஸ்' நிறுவனத்திடம் பணம் வாங்கியுள்ளார். பணத்தை உரிய நேரத்தில் கட்ட முடியாத அவர், குறிப்பிட்ட மைக்ரோ பைனான்ஸ் அலுவலகத்திற்கு மாலை, 5:00 மணிக்கு நேரில் சென்று, 'குழுவில் உள்ளவர்கள் பணம் தரவில்லை; அவர்களிடம் பணத்தை வசூல் செய்து, மொத்தமாக, 7000 ரூபாயை நாளை தருகிறோம்,' என, கூறியுள்ளார். இதனை ஏற்காத மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள், 'உடனடியாக பணத்தை கட்ட வேண்டும்' எனக்கூறி, அந்த பெண்ணை இரவு, 8:00 மணி வரை பைனான்ஸ் அலுவலகத்திலேயே வைத்துள்ளனர்.தகவல் அறிந்த உறவினர்கள், இரவு, 8:00 மணிக்கு மைக்ரோ பைனான்ஸ் சென்று பெண்ணை வெளியே விடுமாறு கூறி உள்ளனர். அதனை ஏற்காத ஊழியர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காயத்திரி, உறவினர்களின் உதவியுடன், கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் கூறுகையில்,'பணம் தரவில்லை என்பதற்காக, பெண்களை நீண்ட நேரம் அலுவலகத்தில் காக்க வைப்பது தவறு. விசாரணை நடத்தி வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X