பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் கல்லுாரியில் 233 மாணவிகளுக்கு பட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

ஊட்டி:ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரியில் நடந்த, 17வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில், 233 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.ஊட்டி, எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லுாரில், 17வது பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகன் பட்டங்கள் வழங்கி பேசியதாவது:பெண்கள் படித்து முன்னேறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை செலுத்தி பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.இந்தியாவில் பெண்களும், ஆண்களுக்கு இணையாக வேலைவாய்ப்பில் உள்ளனர்.மத்திய அரசு படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில்தான் விஞ்ஞானிகள்; மருத்துவர்கள் அதிகமாக உள்ளனர். பல்கலைக்கழகங்களில் அதிகமாக புதிய பாட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதற்கேற்ற பாட திட்டங்களை தேர்வு செய்து படித்து முன்னேற வேண்டும்.சில கல்லுாரிகளில் போலி சான்றிதழ் உள்ளதாக வரும் புகார்கள் குறித்து, துணைவேந்தர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.இவ்வாறு, முருகன் தெரிவித்தார்.இளங்கலையில், 217; முதுகலையில், 16 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைகழக அளவில், விலங்கியல் துறை மாணவி ரிகானா முதலிடம்; ரம்யா ஏழாமிடம், தகவல் தொழில்நுட்பவியல் துறை மானவி பூஜா பத்தாம் இடம் பிடித்தனர். கல்லூரி செயலாளர் மோதிலால் கட்டாரியா, முதல்வர் பார்வதி மற்றும் பேராசிரியைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X