பொது செய்தி

தமிழ்நாடு

மலையில் தைப்பூச விழா கோலாகலம்: முருகன் கோவில்களில் பக்தர்கள் பரவசம்

Added : பிப் 09, 2020
Share
Advertisement

ஊட்டி:நீலகிரியில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்தது.ஊட்டி எல்க்ஹில் மலையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் சுவாமி மற்றும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்; அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.அலங்கரிக்கப்பட்ட தேரில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, திருதேரினை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வடம் பிடித்து துவக்கி வைத்தார். படுகர் இன மக்களின் பஜனை மற்றும் நடனம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா உட்பட பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.இதேபோல், மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில்களில் கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணா நந்தாஜி தலைமையில், தைப்பூச திருவிழா சிறப்பாக நடந்தது.* கூடலுார் குசுமகிரி குமரமுருகன் கோவிலில், காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நிகழ்ச்சிகள் நடந்தது. 9:00 மணிக்கு முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. மாலையில் திரு தேர் ஊர்வலம் நடந்தது. சந்தன மலை முருகன் கோவிலிலும் தைப்பூச விழா சிறப்பாக நடந்தது.*கோத்தகிரி காத்துகுளி தண்டாயுதபாணி கோவிலில் நடந்த விழாவில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, காலை 6:00 மணி வரை பஜனை, ஆன்மிக சொற்பொழிவு இடம்பெற்றது. நேற்று காலை, 9:00 மணிக்கு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், 10:00 மணிக்கு, காவடியாட்டமும் நடந்தது. தொடர்ந்து, 11:00 மணி முதல், 3:00 மணி வரை அன்னதானம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் உலா நடந்தது. திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.* குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.விழாவையொட்டி காலை, 7:00 மணிக்கு கலச ஸ்தாபன பூஜை, மகா கணபதி ஹோமம், மகா அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை ஆகியவை நடந்தன. சிறப்பு ராஜ அலங்காரத்தில் முருகன், பாலமுருகன், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை துணை பொது மேலாளர்கள் டேனியல், ஷெட்டி ஆகியோர், அன்னதானத்தை துவக்கி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X