மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: அவசரமாக பொருட்கள் எடுத்து வைத்த வியாபாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: அவசரமாக பொருட்கள் எடுத்து வைத்த வியாபாரிகள்

Added : பிப் 09, 2020
Share

குன்னுார்:குன்னுார் மார்க்கெட் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் சென்றதால், உடனடியாக பொருட்களை உள்ளே எடுத்து வைத்து வியாபாரிகள் சமாளித்தனர்.குன்னுார் நகராட்சி மார்கெட்டில், 900க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன; மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.கலெக்டர் ஆய்வு நடத்தியபோது, வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், முன்னதாக அறிவித்ததால், கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் இல்லாமல் இருந்தது. எனினும், மார்க்கெட் சங்கம் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் குறித்து, கலெக்டர் கேள்வி எழுப்பினார். அப்போது, 'கோடுகள், அமைத்து ஆக்கிரமிப்பு நிகழாதவாறு, ஏற்பாடு செய்யப்படும்,' என, கலெக்டரிடம் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்பட்டன.இந்நிலையில், நகராட்சி கமிஷனர் பாலு தலைமையில், நகர்நல அலுவலர் டாக்டர் ரகுநாதன், வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய அளவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருந்தது. உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர்.மார்க்கெட் மெயின் கேட் பகுதியில் ஆய்வு நடப்பதை அறிந்த மற்ற கடைக்காரர்கள் அவசர அவசரமாக கடைகளுக்கு முன்பு வைத்திருந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்தனர். மீன் கடை பகுதியில் ஆய்வு நடத்திய போது, மீன்களை முன்பகுதியில் வைத்து விற்பனை செய்வதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.நகராட்சி கமிஷனர் பாலு கூறுகையில்,'' நகராட்சி கடைகளுக்கு முன்பு பொருட்களை யாரும் வைக்க கூடாது. வரும் வாரங்களில் கடைகளுக்கு முன்பு கோடுகள் வரையப்படும். அதனை மீறி பொருட்கள் வைத்து, ஆக்கிரமிப்புகள் செய்தால், அபராதம் விதிப்பதுடன், பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X