ரூ.715 கோடி செலுத்த அனில் அம்பானிக்கு லண்டன் நீதிமன்றம் உத்தரவு

Updated : பிப் 09, 2020 | Added : பிப் 09, 2020 | கருத்துகள் (14)
Advertisement
ரூ.715 கோடி,  லண்டன், நீதிமன்றம், அனில் அம்பானி,உத்தரவு

இந்த செய்தியை கேட்க

லண்டன் : 'சீன வங்கிகளிடம் வாங்கிய கடனுக்கு, டிபாசிட் தொகையாக, 715 கோடி ரூபாயை, ஆறு வாரங்களுக்குள், தொழிலதிபர் அனில் அம்பானி செலுத்த வேண்டும்' என, லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அனில் அம்பானி, தன் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்காக, பல்வேறு வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களிடம் கடன் வாங்கினார். ஆனால், நிறுவனத்துக்கு ஏற்பட்ட பெரும் இழப்பால், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை .




ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம். சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளுக்கு, 5,000 கோடி ரூபாய்கு மேல், கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. கடன் கொடுத்த நிறுவனங்கள். அனில் அம்பானி மீது, ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனிலிருக்கும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கில், நேற்று முன்தினம் விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதத்துக்குப் பின், 'டிபாசிட் தொகையாக, 715 கோடி ரூபாயை, ஆறு வாரங்களுக்குள், அனில் அம்பானி செலுத்த வேண்டும்' என நீதிபதி டேவிட் வாக்ஸ்மேன் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக, அனில் அம்பானி மேல் முறையீடு செய்வார் என, தெரிகிறது.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
10-பிப்-202005:52:34 IST Report Abuse
Sanny "அண்ணன் என்னடா தப்பி என்னடா அவசரமான உலகத்திலே" என்று கண்ணதாசன் எழுதியதை இவரு பாடாமல் இருப்பாரா?
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
09-பிப்-202014:30:58 IST Report Abuse
Suri Rafale விமானம் செய்ய கொடுத்த பணம் பத்திரமாக உள்ளதா??? விமானம் காட்டும் தொழில் இவர் செய்வாரா?? இல்லை மோடி மற்றும் நிம்மி ( முன்னாள் ராணுவம் ) முகத்தில் கரி பூசுவாரா?? லெட்டர் pad பத்திரமாக வைத்துள்ளாரா?? மேலும் பணம் வாங்க எதுவாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
09-பிப்-202012:08:28 IST Report Abuse
பார்ப்பான் இந்திய வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால் அரசாங்கமே தள்ளுபடி செய்திருப்பார்கள். பிழைக்கத்தெரியாதவன்!
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X