பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில், '4ஜி வோல்ட்இ' சேவை: பி.எஸ்.என்.எல்., துவக்கம்

Added : பிப் 09, 2020
Advertisement
 கோவையில், '4ஜி வோல்ட்இ' சேவை: பி.எஸ்.என்.எல்., துவக்கம்

கோவை:கோவை உட்பட தமிழகத்தின் ஐந்து நகரங்களில், '4ஜி வோல்ட்இ' சேவையை பி.எஸ்.என்.எல்., துவக்கியுள்ளது.கோவை உட்பட தமிழகத்தின் ஐந்து நகரங்களில், '4ஜி வோல்ட்இ சேவை' மற்றும் அவிநாசி தொலைபேசி நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை அழைப்பு மையத்தை பி.எஸ்.என்.எல்., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரவீன் குமார் புர்வார் நேற்று துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:கோவை, சேலம், நாகர்கோவில், மதுரை, வேலுார் ஆகிய ஐந்து நகரங்களில் பி.எஸ்.என்.எல்., '4 ஜி வோல்ட்இ சேவை' துவங்கப்பட்டுள்ளது. '4ஜி' நெட்வொர்க் வழியாக, 'வாய்ஸ் கால்' சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.உயர்தர குரல் சேவை, விரைவான அழைப்பு இணைப்பு ஆகியவை, '4 ஜி' சேவை துவக்கத்துக்கு உதவியாக இருக்கும். படிப்படியாக பல்வேறு நகரங்களுக்கும், 'வோல்ட்இ' சேவை விரிவுப்படுத்தப்படும்.இதேபோல், அனைத்து மொழிகளிலும் சந்தாதாரர்களுக்கு சேவை கிடைக்கும் வகையில், நாடு முழுவதும், 10 வாடிக்கையாளர் சேவை அழைப்பு மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.தமிழகம், கேரளா மாநிலங்களின் மொபைல் போன் சேவைக்காக, அவிநாசி தொலைபேசி நிலையத்தில், அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மொபைல் சேவை தொடர்பான புகார்களுக்கு அழைப்பு மையத்தை, 1503 என்ற எண்ணில் இவலசமாக வாடிக்கையாளர்கள் அழைக்கலாம்.ஆங்கிலம், இந்தி மற்றும் மண்டல மொழிகளில் சேவை அளிக்கப்படும். விரைவில், தரைவழி, பிராட்பேண்ட் மற்றும் எப்.டி.டி.எச்., சேவைகளும் அழைப்பு மையத்தில் வழங்கப்படும்.விருப்ப ஓய்வில் பல ஆயிரம் பணியாளர்கள் சென்றாலும், தரமான சேவை வழங்க ஏதுவாக, நிர்வாகரீதியாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.பி.எஸ்.என்.எல்., மொபைல் சேவை இயக்குனர் சீத்தல பிரசாத், தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X