முட்டை ஓட்டில் தலைவர்கள் ஓவியம்! கோவை கல்லூரி மாணவி சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முட்டை ஓட்டில் தலைவர்கள் ஓவியம்! கோவை கல்லூரி மாணவி சாதனை

Added : பிப் 09, 2020
Share
 முட்டை ஓட்டில் தலைவர்கள் ஓவியம்! கோவை கல்லூரி மாணவி சாதனை

தொண்டாமுத்துார்:கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவி மோனிஷா, 50 முட்டைகளில், 50 தலைவர்களின் படங்களை வரைந்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார்.கோவை, உலியம்பாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் - ஆனந்தஜோதி தம்பதியின் மூத்த மகள் மோனிஷா,19; சங்கரா கலை அறிவியல் கல்லுாரியில், பி.காம்., (சி.ஏ.,) மூன்றாமாண்டு படித்து வருகிறார். பத்தாவது வயதில் இருந்து, ஓவியம் வரைவதில், ஆர்வம் கொண்டுள்ளார்.பள்ளி, கல்லுாரிகளில் நடந்த ஓவியப் போட்டிகளில், முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். ஓவியம் வரைய, எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்லாமல், தானாகவே, ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஓவியம் வரைந்து வந்துள்ளார்.கடந்த, ஜன., 31ம் தேதி, ஒரு மணி நேரம், 31 நிமிடம், 59 வினாடிகளில், 50 முட்டைகளில், 50 தேச மற்றும் உலக தலைவர்களின் படங்களை வரைந்து, சாதனை செய்து, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார். மோனிஷாவை, உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.இதுகுறித்து மோனிஷா கூறுகையில், ''சாதனை புரிய ஊக்கம் அளித்த தாய், தந்தை, நண்பர்கள், ஆசிரியர்கள் என, அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து முயற்சித்து, விரைவில் கின்னஸ் ரெக்கார்டிலும் இடம் பிடிப்பேன்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X