பொது செய்தி

தமிழ்நாடு

மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா கோலாகலம்

Added : பிப் 09, 2020
Advertisement

வடவள்ளி:கோவை, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர்த்திருவிழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன், தைப்பூச தேர் திருவிழா துவங்கியது. தினமும், யாகசாலை பூஜைகள் நடத்தி, சூரிய பிரபை, சந்திர பிரபை, வெள்ளி மயில், தங்கமயில் வாகனங்களில், சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா வந்தார். தைப்பூச தேர் திருவிழாவையொட்டி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டன. காலை, 5:00 மணிக்கு, சுப்ரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. 10:40க்கு, வெள்ளை யானை வாகனத்தில், சுவாமி திருவீதி உலா வந்தது. கோவையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பக்தர்கள், பால்குடம், காவடி, பன்னீர் குடம் எடுத்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மதியம், 12:30க்கு, கந்தனுக்கு அரோகரா... வேலனுக்கு அரோகரா... கோஷங்கள் முழங்க, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன், திருத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலையில் குவிந்தனர். இதனால், வடவள்ளியில் இருந்து மருதமலை கோவில் வரை களைகட்டியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X