பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி- - குன்னுார் இடையே கூடுதல் ரயில் இயக்க முடிவு

Added : பிப் 09, 2020
Advertisement
 ஊட்டி- - குன்னுார் இடையே கூடுதல் ரயில் இயக்க முடிவு

குன்னுார்:ஊட்டி-குன்னுார் இடையே, கோடை சீசனுக்கு, தினமும் மூன்று முறை கூடுதலாக மலை ரயில் இயக்க, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.நுாற்றாண்டு பழமை வாய்ந்த, நீலகிரி மலை ரயில், சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நிலக்கரி மூலம் இயங்கி வந்த இன்ஜின்கள், பர்னஸ் ஆயில் இன்ஜின்களாக மாற்றப்பட்டு, குன்னுார் --- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வருகிறது. குன்னுார் -- ஊட்டி இடையே, டீசல் இன்ஜின்கள் மூலம் இயக்கப்படுகிறது. வரும் கோடை சீசனுக்கு முன்னதாக, ஊட்டி-குன்னுார் இடையே கூடுதலாக, தினமும் மூன்று முறை மலை ரயில் இயக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,'தற்போது, ஊட்டி-குன்னுார் இடையே, தினமும் நான்கு முறை, மலை ரயில் இயக்கப்படுகிறது. இவற்றுடன், கோடை சீசனுக்கு மூன்று முறை கூடுதலாக இயக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 'சிறப்பு மலை ரயில்களில் கூடுதல் கட்டணத்தை, ஆய்வு செய்து, ஒரே கட்டணமாக மாற்றவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X