சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை :'போக்சோ'வில் ஒருவர் கைது

Added : பிப் 09, 2020
Share
Advertisement

கோவை:ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கோவை, சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியை சேர்ந்த குப்புசாமி மகன் ஆனந்த், 46. பிளாஸ்டிக் கதவுகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வந்தார்.அப்பகுதியில் ஒரு தம்பதிக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. பெற்றோர் பணிக்கு சென்று விடுவதால், குழந்தை சித்தியின் பராமரிப்பில் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த, 6ம் தேதி குழந்தை அழுது கொண்டே இருந்தது.இதையடுத்து, குழந்தையை பரிசோதித்த தாய் பிறப்புறுப்பில் காயம் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். குழந்தையின் சித்தியிடம், விசாரித்ததில், ஆனந்த் குழந்தைக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து குடோனுக்கு அழைத்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து பெற்றோர் மேற்கு மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். ஆனந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X