அரசியல் செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு உரிய முறையில் விசாரணை: முதல்வர் பழனிசாமி பேட்டி

Added : பிப் 09, 2020
Advertisement

கோவை:''தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடுகள் பற்றி, உரிய முறையில் விசாரணை நடந்து வருகிறது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.முதல்வர் பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தன்னாட்சி பெற்ற அமைப்பு. இதில் நடந்த முறைகேடு பற்றி தற்போது விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.டி.என்.பி.எஸ்.சி., தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் யாருடைய தலையீடும் இருக்காது. உரிய முறையில் காவல்துறையிடம் புகார் செய்து, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியவை, அவருடைய சொந்தக் கருத்துகள். அவர் ஒரு பக்திமான். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 70 வயதானவர். அவர் கீழே குனிய முடியாத காரணத்தால், உதவிக்கு சிறுவனை அழைத்துள்ளார். இதை மீடியாக்கள் பெரிதுபடுத்தியுள்ளன.ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அவர்களின் தகுதியை அறிந்து கொள்ளவே நடத்தப்படுகிறது. மாணவர்களின் தகுதியை நிர்ணயிப்பதுதான் தேர்வு. எனினும், பெற்றோர் கோரிக்கையை ஏற்று, கல்வியமைச்சர் ரத்து செய்துவிட்டார்.இவ்வாறு, முதல்வர் பழனிசாமி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X