சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் ஒரே நாள் இரவில் 2 கொள்ளை, 5 திருட்டு முயற்சி

Added : பிப் 09, 2020
Advertisement

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே, நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில் கொள்ளையடித்த மர்ம நபர்கள், நான்கு அலுவலகம் மற்றும் ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள மலைகோவில் பஸ் நிறுத்தம் எதிரே உள்ள தனியார் வணிக வளாகத்தில், தனியார் அலுவலகங்கள், கடைகள் உள்ளன. இதில், முதல் தளத்திலுள்ள ராஜாராம் என்பவரது மெடிக்கல் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் மர்ம நபர்கள், பூட்டை உடைத்து, 16 ஆயிரம் ரூபாய், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதே போல், பிரதீப் என்பவரது கன்ஸ்ட்ரக்சன் அலுவலகத்தின் பூட்டை உடைத்து, 18 ஆயிரம் ரூபாய், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், வெற்றிச்செல்வி என்பவரது டெய்லர் கடை, பாரத் என்பவருடைய கடை, நிரஞ்சன் என்பவருடைய சோலார் பிளான்ட் அலுவலகம், கிருஷ்ணசாமி அலுவலகம் ஆகியவற்றின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தரைத்தளத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்., மையத்தின் பூட்டை உடைத்த போது, இரவு நேர பாது காவலர் வந்ததால், மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகார்படி திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X