சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முனீஸ்வரன் கோவிலில் உண்டியல் காணிக்கை திருட்டு

Added : பிப் 09, 2020
Advertisement

குடியாத்தம்: குடியாத்தம் அருகே, முனீஸ்வரன் கோவில் உண்டியலில் காணிக்கையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், உப்பரபள்ளியில் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு, நாள்தோறும் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து, காணிக்கை செலுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, பூசாரி, கோவிலில் பூஜையை முடித்து விட்டு, வீட்டிற்கு சென்றார். நேற்று காலை, அவ்வழியாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் சென்றபோது, கோவிலின் கதவு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று, அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X