சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை ஆபாசமாக பேசியவர் கைது

Added : பிப் 09, 2020
Share
Advertisement

கண்ணமங்கலம்: போலீசாரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் போலீசார் நேற்று, கெங்கராம்பட்டு கேட் பகுதியில், வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்தே வேனை, போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், வேன் டிரைவர், போலீசார் மீது மோதுவது போல் சென்று, நிறுத்தாமல் சென்றார். போலீசார் அவரை வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கினர். அப்போது, வேன் டிரைவர், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேலூர் வேலப்பாடியை சேர்ந்த வேன் ஓட்டுனர் செல்வம், 27, என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X