பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - ஈரோடு

Added : பிப் 09, 2020
Advertisement

சுகாதார சீர்கேடான குடிநீர் தொட்டி: மொடக்குறிச்சி யூனியன், எழுமாத்தூர் பஞ்சாயத்து, பொன்னம்பாளையத்தில் தரைமட்ட குடிநீர் தொட்டி உள்ளது. விரிசல் விழுந்து சேதமான நிலையில், தண்ணீர் கசிந்து பாசனம் பிடித்தது. பராமரிப்பு செய்ததால், அந்த இடம் அழுக்குபடிந்து, சுகாதார சீர்கேடாகி, கறுப்பாக காணப்படுகிறது. பார்க்கவே அருவெருப்பாக உள்ளது. இதனால் தண்ணீர் சுகாதாரமாக இருக்குமா? என்ற கேள்வி மக்களுக்கு எழுகிறது. பஞ்., நிர்வாகம் பராமரிப்பு செய்து அசூசை போக்குமா?
தெருவிளக்கு அத்யாவசியம்: டி.என்.,பாளையம் யூனியன், கொங்கர்பாளையம் கிராமம், கொழுஞ்சிக்காடு பகுதி, வயல்வெளி நிறைந்த இடமாக திகழ்கிறது. இப்பகுதியில் குறுகிய திருப்பத்தில் மின் கம்பங்கள் செல்கின்றன. ஆனால் தெருவிளக்கு இல்லை. இதனால், இரவு நேரங்களில், வாகனங்களில் செல்வோர் மற்றும் பாதசாரிகள் அச்சத்தில் கடக்கின்றனர். விளக்கு ஏற்படுத்துவதற்கான வசதி இல்லை என்றால், அதற்கான அமைப்பை ஏற்படுத்தி, விளக்கு அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தடுப்பு உடைப்பு; கழிவு நீர் கலப்பு: ஈரோடு, காரைவாய்க்கால் பகுதியில், பெரும்பள்ளம் ஓடையில் சாக்கடை கழிவு நீர், சாய, சலவை ஆலை கழிவு நீர் கலக்காமல் இருக்க சிறிய பாலம் போன்ற தடுப்பு கட்டி வைத்துள்ளனர். பல இடங்களில் அத்தடுப்பை உடைத்து, கழிவு நீர், ஆலை கழிவு, குப்பை, ஆலைகளின் திடக்கழிவுகளை பெரும்பள்ளம் ஓடையில் கலக்கின்றனர். இதை தடுப்பதுடன், இவற்றை உயரமாக அமைத்து, அப்பகுதியில் உள்ள ஆலைகளுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதிவாசிகள்.

லாரி தொல்லை; மக்கள் கவலை: ஈரோடு, மஜீத் வீதியில் அதிக எண்ணிக்கையில் லாரி புக்கிங் அலுவலகங்கள், குடோன்கள் உள்ளன. இவ்வழியாக சேலம், திருச்செங்கோடு செல்லும் பஸ்கள், பிற வாகனங்கள் செல்லும். எந்நேரமும் லாரிகளை நடுரோட்டில் நிறுத்தி, சரக்குகளை ஏற்றி, இறக்குதல், சந்துகளில் திருப்ப முடியாமல் லாரியை குறுக்காக நிறுத்தி தொல்லை செய்கின்றனர். இதுபற்றி கேட்டால், டிரைவர், குடோன்காரர்கள் மிரட்டுவதாக, மக்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட நேரம் தவிர, பிற நேரம் லாரிகளை அனுமதிக்கக்கூடாது.

குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்: ஆப்பக்கூடலில், பவானி - சத்தியமங்கலம் செல்லும் சாலையில், அரசு மருத்துவமனை உள்ளது. இதன் அருகில் குடிநீர் குழாய் செல்கிறது. அப்பகுதிவாசிகளுக்கு இந்த நீரே வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக செல்கிறது. சம்பந்தப்பட்ட ஆப்பக்கூடல் பேரூராட்சி நிர்வாகம், மேலும் மெத்தனம் காட்டாமல், உடைப்பை சரி செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X