பொது செய்தி

தமிழ்நாடு

சென்னிமலை முருகன் கோவிலில் 'அரோகரா' கோஷம் முழங்க தைப்பூச தேரோட்டம்

Added : பிப் 09, 2020
Advertisement

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம், 'அரோகரா' கோஷம் விண்ணை முட்ட, பக்தி பரவசத்துடன் நேற்று நடந்தது.
சென்னிமலை மலை முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, கடந்த, 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த, 10 நாட்களாக சிறப்பு பூஜைகளுடன் விழா நடந்தது. நாள்தோறும் முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக, அலங்கார வாகனங்களில் திருவீதி உலா சென்றார். இந்நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, வசந்த மண்டபத்தில் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 6:00 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவ மூர்த்திகள் புறப்பாடும் நடந்தது. தேர் நிறுத்தப்பட்ட இடத்துக்கு, 6:10 மணிக்கு வந்தடைந்தன. தேர் நிலையை மூன்று முறை வலம் வந்து, 6:30 மணிக்கு, மூன்று தேர்களில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டன. முதல் தேரில் விநாயகப்பெருமான், பெரிய தேரில் முருகப்பெருமான் அமிர்தவள்ளி, சுந்தரவள்ளி சமேதராக தங்க கவச அலங்காரத்திலும், மூன்றாம் தேரில் நடராஜர் சமேதராக எழுந்தருளினார். அதை தொடர்ந்து கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவச்சாரியார் தலைமையில் சிறப்பு ஆராதனை, சுவாமி தரிசனம் நடந்தது. இதையடுத்து, 6:32 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன், ஈரோடு மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். அதை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்தனர்.

கந்தனுக்கு 'அரோகரா': முருகனுக்கு 'அரோகரா' கோஷம் எழுப்பி இழுத்துச் சென்றனர். வழி நெடுக திரண்டிருந்த பக்தர்கள், தேர் மீது உப்பு மிளகு தூவியும், கடலைக்காய், நெல்மணி தூவியும் முருகப்பெருமானை வழிபட்டனர். தேரோட்டத்தை ஒட்டி, தேவஸ்தான மண்டபத்தில், தைப்பூச இசை விழா குழு சார்பாக அன்னதானம் வழங்கபட்டது. பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள், காவடி சுமந்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 6:55 மணிக்கு தெற்கு ராஜா வீதியில் நிலை நிறுத்தப்பட்ட தேர், மீண்டும் மாலை, 4:50 மணிக்கு இழுக்கப்பட்டது. தெற்கு, மேற்கு ராஜவீதிகளில் வலம் வந்து, வடக்கு ராஜா வீதியில் நிறுத்தப்பட்டது, திருத்தேர் இன்று மாலை, 5:30 மணிக்கு நிலையடைகிறது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம், ?2ம் தேதி நடக்கிறது. அன்றிரவு, 8:00 மணிக்கு, நடராஜ பெருமான், சுப்ரமணிய சுவாமி முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா செல்வர். இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள், சென்னிமலையில் கூடுவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X