பச்சமலை, பவளமலையில் தைப்பூச விழா: திண்டல் கோவிலில் குவிந்த பக்தர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பச்சமலை, பவளமலையில் தைப்பூச விழா: திண்டல் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Added : பிப் 09, 2020
Share

ஈரோடு மாவட்ட, முருகன் கோவில்களில், தைப்பூச விழா, வழக்கமான உற்சாகத்துடன், நேற்று கொண்டாடப்பட்டது.
தைப்பூச விழாவையொட்டி, கோபி அருகே, பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், நேற்று அதிகாலை மூலவருக்கு மகன்யாச அபி?ஷகம் நடந்தது. பின், திருப்படி விழா, காவடி அபிஷேகம், 108 பால்குட அபி?ஷகம் நடந்தது. இதேபோல் பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், மூலவருக்கு மகன்யாச அபி?ஷகம், பால்குட அபிஷேகம், யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.


* ஈரோடு, திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு மூலவர் வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், பால்குடம், காவடி, தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வேலாயுத சுவாமியை தரிசனம் செய்தனர்.


* பவானி, கூடுதுறை பழனியாண்டவர் கோவிலுக்கு, அதிகாலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். கூடுதுறையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், வள்ளி, தெய்வானை சமேதராக, பழனியாண்டவர் வீற்றிக்க, நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள், இழுத்துச் சென்றனர்.


* அந்தியூர் தேர்வீதி சுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு, பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும், காவடி எடுத்தும், நூற்றுக்கணக்கான பக்தர்கள், ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

- நிருபர் குழு -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X