பொது செய்தி

தமிழ்நாடு

முதுகலை ஆசிரியர் பணிக்கு இன்று, நாளை கலந்தாய்வு

Added : பிப் 09, 2020
Advertisement

ஈரோடு: அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், பணி நாடுநர் பட்டியல் பெறப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு, பணி ஒதுக்கீடு ஆணை வழங்க, அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில், இன்று, நாளை கலந்தாய்வு நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், மனையியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களுக்கு, கவுன்சிலிங் இன்று நடக்கிறது. கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல் பணியிடங்களுக்கு, நாளை நடக்கிறது. கவுன்சிலிங்கில், ஈரோடு மாவட்டத்தில், 74 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இவர்கள் இன்று, நாளை நடக்கும் ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்பர். இதன்பிறகு பணியாணை வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X