சி.ஏ.ஏ.,வை கண்டித்து எதிர்ப்பு பேரணி: ஈரோட்டில் 1,500 பேர் மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சி.ஏ.ஏ.,வை கண்டித்து எதிர்ப்பு பேரணி: ஈரோட்டில் 1,500 பேர் மீது வழக்கு

Added : பிப் 09, 2020
Share

ஈரோடு: ஈரோட்டில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, மனித சங்கிலி போராட்டம் நடத்திய, 1,500 பேர் மீது, மூன்று பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்ப பெற வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சி மற்றும் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோட்டில், கடந்த, 30ல் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., மாவட்ட செயலாளர் முத்துசாமி, காங்., மாநகர் மாவட்ட தலைவர் ரவி, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன், மார்க்., கம்யூ., மாவட்ட செயலாளர் ரகுராம், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசர், நீரோடை ஒருங்கிணைப்பாளர் நிலவன் உள்ளிட்ட, 26 அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட, 1,500 பேர் மீது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் போட்டது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியது, மக்களிடம் அச்சம், குழப்பம், வன்முறையை தூண்டும் விதத்தில் நடந்து கொள்வது என, மூன்று பிரிவுகளில், வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X