சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு வேலைக்கு போலி நியமன ஆணை: தந்தையுடன் கால் டாக்சி டிரைவர் கைது

Added : பிப் 09, 2020
Advertisement

ஈரோடு: அரசு வேலை வாங்கி தருவதாக, கல்லூரி பேராசிரியரிடம், ஏழு லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, போலி நியமன ஆணை தந்த, கால் டாக்சி டிரைவர், தந்தையுடன் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு, பெரியசேமூர், சோழா நகரை சேர்ந்தவர் கோகுல கண்ணன், 40; தனியார் கல்லூரி உதவி பேராசிரியர். கால் டாக்சி டிரைவர் கார்த்திகேயன், 32; நண்பர்கள் மூலம் பழக்கமான இவரிடம், தான் அரசு வேலைக்கு முயற்சிப்பதாக தெரிவித்தார். அரசு உயர் அதிகாரிகளை நன்கு தெரியும். பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக உறுதி கூறியுள்ளார். இதை நம்பி, 2018 ஜூன் மாதம் முதல் செப்., வரை, ஏழு லட்சம் ரூபாய் தந்துள்ளார். இதையடுத்து கார்த்தி கேயன், பணி நியமன ஆணை வழங்கினார். சென்னைக்கு கொண்டு சென்று, அரசு அலுவலக அதிகாரிகளிடம் விசாரித்தபோது போலி என்பது தெரிந்தது. இதனால், பணத்தை திரும்ப தருமாறு கேட்டார். தட்டிக் கழித்ததால், சூரம்பட்டி போலீசில், கார்த்திகேயன், அவரது மனைவி லாவண்யா, கார்த்திகேயன் தந்தை ரவிக்குமார், பிரதீப்குமார், அவரது பெற்றோர், பாலசந்தர் ஆகியோர் மீது, புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், கார்த்திகேயன், ரவிக்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X