பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை பூங்கா விழா ஏற்பாடு: அமைச்சர் ஆய்வு

Added : பிப் 09, 2020
Advertisement

ஆத்தூர்: தலைவாசல், வி.கூட்ரோட்டிலுள்ள ஆட்டுப்பண்ணையில், கால்நடை பூங்கா, விலங்கின உயர் ஆராய்ச்சி நிலையம், 1,080 ஏக்கரில், 1,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில், இன்று நடக்கவுள்ளது. அதில், முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான, விழா ஏற்பாடு பணியை, தமிழக கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, எம்.எல்.ஏ.,க்களான, கெங்கவல்லி மருதமுத்து, ஆத்தூர் சின்னதம்பி, தலைவாசல் ஒன்றிய தலைவர் ராமசாமி உடனிருந்தனர். முன்னதாக, பல்வேறு கண்காட்சி அரங்குகள், பொருட்களை பார்வையிட்டனர். இன்று, கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர் பழனிசாமி, அதே வளாகத்தில், விவசாய பெருவிழா, கண்காட்சி, கருத்தரங்கை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். நாளை, நாளை மறுநாள், சேலம் மாவட்டம் மட்டுமின்றி, அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும், மாணவ, மாணவியர் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு கால்நடைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடத்துவதோடு, கால்நடை கல்லூரிகளில், அவர்கள் சேர்வது தொடர்பாக, பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எடுத்துரைக்க உள்ளனர். மேலும், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு குறித்து, கருத்தரங்கு நடக்கிறது. இதில், கால்நடைகளை வளர்க்கும் முறை, கால்நடை பாதுகாத்தல், அதன் மூலம் வருவாய் பெருக்கம் குறித்து, விரிவான கருத்துகளை, ஆராய்ச்சியாளர்கள் எடுத்துரைக்க உள்ளனர். வேளாண் துறை சார்பில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வேளாண் நவீன யுக்திகளை கையாளுதல், புதிய சாகுபடி முறை, நீர் மேலாண்மை, அதன் மூலம் அதிக மகசூல் பெறுவது குறித்து எடுத்துரைப்பர். நாட்டு பசுக்கள், ஆட்டினங்கள், செல்லப்பிராணிகள் வளர்ப்பு, கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் ஆகியவற்றையும், விவசாயத்தில் புதிய ரகங்கள், விவசாயிகளுக்கு கிடைக்கும் உதவிகள், பயன்கள் குறித்து, 200 கண்காட்சி அரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சூ15 ஆயிரம் பயனாளிகளுக்கு, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X