பொது செய்தி

தமிழ்நாடு

'அரோகரா' கோஷம் அதிர தைப்பூச தேரோட்டம் கோலாகலம்

Added : பிப் 09, 2020
Share
Advertisement

வீரபாண்டி: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் நடந்த, தைப்பூச தேரோட்டத்தில், 'அரோகரா' கோஷம் முழங்க, திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச திருவிழா, கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, வள்ளி தெய்வானையுடன், கந்தசாமிக்கு, திருக்கல்யாணம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபி?ஷகம் முடிந்து, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மதியம், 3:00 மணிக்கு, ஹிந்துசமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ரமேஷ், செயல் அலுவலர் முருகன், பரம்பரை அறங்காவலர் சந்திரலேகா ஆகியோர் தலைமையில், முதலில், விநாயகர் எழுந்தருளச்செய்த, சிறு தேரை, பக்தர்கள் இழுத்து, கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேத கந்தசாமி, சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருளச்செய்தனர். சிறப்பு பூஜைக்கு பின், தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் எழுப்பியபடி, வடம்பிடித்து தேரை இழுத்து, கோவிலை வலம் வந்தனர். அப்போது, பலர், தங்கள் வயல்களில் விளைந்த தானியங்கள், உப்பு, மிளகு ஆகியவற்றை, தேரில் வீசி, காணிக்கையாக செலுத்தினர். தேரோட்டத்தைக்காண, ராசிபுரம், மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர், இளம்பிள்ளை, காகாபாளையம் உள்பட பல்வேறு ஊர்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பால், பன்னீர், இளநீர் புஷ்ப காவடிகளை எடுத்துவந்தும் காணிக்கை செலுத்தினர். அவர்களுக்கு, ஆட்டையாம்பட்டி முதல் காளிப்பட்டி வரை, வழி நெடுகிலும், தண்ணீர் பந்தல், அன்னதான பந்தல் அமைக்கப்பட்டு, நீர்மோர், உணவு வழங்கப்பட்டது. விழாவையொட்டி, சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்செங்கோடு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நாளை இரவு சத்தாபரணம், நாளை மறுநாள், வசந்த உற்சவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X