தேசிய பீச் டென்னிஸ்: சேலம் வீரர்கள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய 'பீச்' டென்னிஸ்: சேலம் வீரர்கள் அசத்தல்

Added : பிப் 09, 2020
Share

வீரபாண்டி: தேசிய அளவில் நடந்த, 'பீச்' டென்னிஸ் போட்டியில், சேலம் வீரர்கள் அசத்த, தமிழக அணி, மூன்றாமிடத்தை பிடித்தது.
உத்தரபிரதேசத்தில், மூன்றாவது, தேசிய, 'பீச்' டென்னிஸ் போட்டி, கடந்த, 1, 2ல் நடந்தது. அதில், தமிழக அணி சார்பில், சேலத்தைச் சேர்ந்த அருண்குமார், ரமணிதரன், அகின் விக்ரம் ஆகியோருடன், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 12 வீரர்கள் பங்கேற்றனர். சீனியர் பிரிவில், அருண்குமார் தங்கமும், இரட்டையர் பிரிவில், வெண்கலமும் வென்றார். சப் - ஜூனியர் பிரிவில், ரமணிதரன் வெள்ளி, இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றார். சப் - ஜூனியர் இரட்டையர் பிரிவில், அகின் விக்ரம் வெண்கலம் பெற்றார். ஒட்டுமொத்தமாக, தமிழக அணி மூன்றாமிடம் பிடித்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு, இந்திய, 'பீச்' டென்னிஸ் பெடரேஷன் தலைவர் விரிடி, செயலர் கில், துணைத்தலைவர் தியாகி ஆகியோர், பதக்கம், சான்றிதழ் வழங்கினர். தமிழக அணி மேலாளர் சித்தையன், தமிழக, 'பீச்' டென்னிஸ் சங்க பொதுச்செயலர் அருண்குமார் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X