பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதிமன்றத்தில் 2,217 வழக்குக்கு தீர்வு

Added : பிப் 09, 2020
Advertisement

சேலம்: மக்கள் நீதிமன்றத்தில், 2,217 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு, 38.62 கோடி ரூபாய் தீர்வுத்தொகை வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு சார்பில், நேற்று, தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. சேலம் நீதிமன்ற வளாகத்தில் நடந்த தொடக்க விழாவில், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி குணவதி வரவேற்றார். முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். சேலம் நீதிமன்ற வளாகம், ஆத்தூர், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட இடங்களில், நீதிபதி, மூத்த வக்கீல், சமூக ஆர்வலர் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச்சுகளில் விசாரணை நடந்தது. 5,929 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில், சமரசம் செய்து கொள்ளக்கூடிய சிறு குற்றம், காசோலை மோசடி, வங்கி, கல்வி உதவி, விபத்து இழப்பீடு, தொழிலாளர் நலன், திருமண ஜீவனாம்சம் உள்ளிட்ட வழக்குகள் இடம்பெற்றன. இவற்றில், 2,217 வழக்குக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வுத்தொகையாக, 38 கோடியே, 62 லட்சத்து, 54 ஆயிரத்து, 91 ரூபாய் வழங்கப்பட்டது. இதில், மேட்டூர் நீதிமன்றத்தில், விவாகரத்து வழக்கு தொடர்ந்து, ஐந்தாண்டாக பிரிந்திருந்த ராஜ்குமார், அனிதா தம்பதியருக்குள் சமரசம் ஏற்படுத்தி, சேர்த்து வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X